குவாண்டம் புரட்சி!
மனித இனத்தின் முதன்மையான அறிவியல் தேடல்களுள் ஒன்று, தற்போது குவாண்டம் உலகத்தை எட்டியுள்ளது.
மனித இனத்தின் முதன்மையான அறிவியல் தேடல்களுள் ஒன்று, தற்போது குவாண்டம் உலகத்தை எட்டியுள்ளது.
இரு நுண்ணிய துகள்கள் குறிப்பிட்ட முறையில் பிணைக்கப்படும்போது, அவை எவ்வளவு தொலைவில் இருந்தாலும், ஒன்றின் நிலையை அளவிடும்போது மற்றொன்றின் முடிவையும் அறிய முடிகிறது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இதனை புதிரான ஒன்றாகக் கருதினாலும், இதன் மூலம் ஒளியைவிட வேகமாகக் கருத்துகளை அனுப்ப முடியாது என்பதே இயற்பியல் வரம்பாகும்.
Advertisement
Advertisement
தற்காலக் கணினிகள் தகவல்களை பூஜ்ஜியம், ஒன்று எனும் எண்களாகக் கையாளுகின்றன. ஆனால், குவாண்டம் கணினிகள் கியூபிட்களைப் பயன்படுத்துகின்றன. இதில் பயன்படுத்தப்படும் குவாண்டம் விசை விநியோகத் தொழில்நுட்பம், தகவல்களைப் பாதுகாப்பாக அனுப்ப உதவுகிறது. யாரேனும் தகவலை இடை
மறிக்க முயன்றால், அத்துகள்களின் நிலை மாறுவதால், ஊடுருவலை உடனடியாகக் கண்டறியமுடியும்.
குவாண்டம் டெலிபோர்ட்டேஷன்' என்பது மனிதர்களையோ, பொருள்களையோ மாயமாக இடமாற்றம் செய்யும் முறை அல்ல. இது ஒரு குவாண்டம் நிலையை மற்றொரு இடத்துக்கு மாற்றும் தொழில்நுட்பம் மட்டுமே. இதற்கு வழக்கமான தகவல் தொடர்புச் சேனல்களும் தேவைப்படுவதால், இதிலும் ஒளியைவிட அதிவேகத் தகவல் பரிமாற்றம் சாத்தியமில்லை. எதிர்காலத்தில் வங்கி, அரசுத் துறைகளின் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்துக்கு இந்தத் தொழில்நுட்பம் பெரிதும் உதவும்.
மேலும், உலகெங்கிலும் உள்ள குவாண்டம் சாதனங்களை இணைக்கும் குவாண்டம் இணையம், செயற்கைக்கோள்கள் மூலமாக விண்வெளித் தகவல் தொடர்பு போன்ற துறைகளில் இது புதிய புரட்சியை ஏற்படுத்தும். இயற்கையானது நாம் அன்றாடம் காண்பதை விட மிகவும் ஆழமானது என்பதை குவாண்டம் உலகம் நமக்கு உணர்த்துகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.