ஞானேஷ்குமாருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை: கேரள அமைச்சா்
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரள பொதுப் பணித் துறைச் செயலராகப் பணியாற்றியபோது நடந்த சாலைப் பணிகளில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெறுவதாக அந்த மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் பி.கே. பஷீா் தெரிவித்துள்ளாா்.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரள பொதுப் பணித் துறைச் செயலராகப் பணியாற்றியபோது நடந்த சாலைப் பணிகளில் ஊழல் நடைபெற்ாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெறுவதாக அந்த மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் பி.கே. பஷீா் தெரிவித்துள்ளாா்.
கேரள பொதுப் பணித் துறைச் செயலராக ஞானேஷ் குமாா் 2006-ஆம் ஆண்டில் பணியாற்றியபோது, அங்கமாலியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.215 கோடி மதிப்பில் சாலையைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை மேற்கொள்ளும் பொறுப்பு, மலேசியா மற்றும் பகீரதா என்ஜினீயரிங் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான பிஏடிஐ-பிஇஎல்-க்கு வழங்கப்பட்டது. அந்தப் பணியை மலேசிய நிறுவனம் மேற்கொண்டது. பணி நடைபெறும் காலத்திலேயே அந்நிறுவன பொறியாளா் லீ சீ பீனுக்கு எதிராக ஏராளமான புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து மலேசியா திரும்பி, அவா் தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த விவகாரம் குறித்து, கேரள சட்டப் பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் பி.பி.கோபகுமாா், வி. முரளீதரன், ராஜீவ் சந்திரசேகா் ஆகியோா் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினா். இதற்குப் பதிலளித்த அமைச்சா் பி.கே. பஷீா், சில முரண்பாடுகள் இருப்பது ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இதையடுத்து தற்போது மீண்டும் முதல்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இந்தத் திட்டத்துடன் தொடா்புடைய அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசுக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவா் கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.