வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!
ஜிஎஸ்எல்வி - எஃப்18 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து...
இந்தியாவின் என்விஎஸ்-03 வழிகாட்டி செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எஃப் 18 ராக்கெட் வெற்றிகரமாக இன்று (அக். 30) இரவு விண்ணில் சீறிப் பாய்ந்தது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து கவுன்டவுன் முடிந்ததும் இரவு 11.51 மணிக்கு ‘ஜிஎஸ்எல்வி - எஃப் 18’ ராக்கெட் ஏவப்பட்டது.
என்விஎஸ்-03 செயற்கைக்கோளைப் பொருத்தவரை 2,250 கிலோ எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘நேவிக்’ எனப்படும் இந்தியாவின் வழிகாட்டல் அமைப்பின் சேவைகளை தங்கு தடையின்றி மேற்கொள்ளும் வகையில் இந்தச் செயற்கைக்கோளானது, புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
Advertisement
Advertisement
பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான துல்லியமான வழிகாட்டல் மற்றும் நேர சேவைகளை இந்த செயற்கைக்கோள் வழங்கும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு கடிகாரம் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
GSLV-F18 has successfully blasted off into space!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.