FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பத்ரிநாத்தில் இருந்து பக்தர்களுடன் திரும்பிய ஹெலிகாப்டர் விபத்து!

பத்ரிநாத்தில் இருந்து திரும்பிய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது பற்றி...

கோப்புப்படம் - Express
பகிர்:

உத்தரகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத்திலிருந்து பக்தர்களுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது. இதில் பயணித்த விமானி உள்பட 6 பேர் பலியாகினர்.

பத்ரிநாத்திலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் பக்தர்களை ஏற்றுக் கொண்டு திரும்பிய டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஜோஷிமத் அருகே மலைச்சரிவில் மோதி விபத்துக்குள்ளானதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த ஹெலிகாப்டரில் விமானி மற்றும் 5 பக்தர்கள் பயணித்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விழுந்த பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், மீட்புப் பணிகளுக்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்திய ராணுவத்திடம் உதவி கேட்கப்பட்டுள்ளது.

summary

Helicopter returning from Badrinath meets with an accident!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments