FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!

நடுவானில் சக விமானி தாக்குதலின்போதும் போராடி பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது...

ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது... - X
பகிர்:

நடுவானில் சக விமானி தாக்குதலின்போதும் துணிச்சலுடன் போராடி பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு கடந்த செப். 30 அன்று 174 பயணிகளுடன் சென்ற விமானத்தில் சக விமானி ஒருவர், இந்திய விமானி ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்தினார்.

கத்திக்குத்தால் ரத்த வெள்ளத்தில் இருந்தபோதும், தாக்குதலுக்குள்ளான விமானி ஸ்மித் மச்சார், சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தைப் பாதுகாப்பாக தரையிறக்கி அனைத்து பயணிகளின் உயிரையும் காப்பாற்றினார்.

Advertisement

Advertisement

இதையடுத்து உலகம் முழுவதிலும் இருந்து விமானிக்கு பாராட்டுகள் குவிந்தன. பிரதமர் மோடியும் ஸ்மித் மச்சாரிடம் பேசியிருந்தார்.

ஸ்மித் மச்சாரை பாராட்டிய ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் - X

அதேபோல, இந்திய விமானி ஸ்மித் மச்சாரை மருத்துவமனைக்கு நேரில் சென்று துபை பட்டத்து இளவரசா் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நலம் விசாரித்தார்.

இதையடுத்து பயணிகளின் உயிரைப் போராடி காப்பாற்றிய ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் 'First Class Order of Zayed II' (பர்ஸ்ட் கிளாஸ் ஆர்டர் ஆப் சையத் II) எனும் உயரிய விருதை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வழங்கி கௌரவித்தார். துபை பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது உடனிருந்தார்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துணிச்சலுடன் போராடிய விமானக் குழுவினரை அதிபர், இளவரசர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர். மக்களின் பாதுகாப்பைப் பேணுவதே ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மையான முன்னுரிமை என்பதையும் வலியுறுத்தினர்.

இந்த கௌரவ விருதைப் பெற்றதில் பெருமிதம் கொள்வதாகவும், தங்கள் சேவைக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாக இதைக் கருதுவதாகவும் விமானக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

ஏற்கெனவே ஸ்மித் மச்சார் இஸ்ரேலின் மிக உயரிய விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

summary

UAE honours Captain Smit Machchhar for bravery during flydubai cockpit attack

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments