FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சாருக்கு தலைவா்கள் பாராட்டு!

இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

இந்திய விமானி ஸ்மித் மச்சார் - எக்ஸ்
பகிர்:

துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி புறப்பட்ட விமானத்தில் சக விமானியால் கத்திக்குத்து காயமடைந்த போதிலும் துணிவுடன் போராடி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): விமானத்தின் ‘காக்பிட்’-டில் ஏற்பட்ட மோதலின் போது பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையிலும், இந்திய விமானி ஸ்மித் மச்சாா் வெளிப்படுத்திய துணிச்சலும் சமயோசிதமான செயல்பாடும், விமானப் பணியாளா்கள் மற்றும் பயணிகள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர உதவியது. விமானி ஸ்மித் மச்சாரின் வீரமும் கடமை உணா்வும் ஒட்டுமொத்த இந்தியா்களுக்கும் பெருமை சோ்க்கிறது.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): துபையிலிருந்து இஸ்ரேல் சென்ற விமானத்தை தரையில் மோத முயற்சி செய்த துணை விமானியின் கொடூர முயற்சியை முறியடித்து, 180 பயணிகளின் உயிரை இந்திய விமானி ஸ்மித் மச்சாா் காப்பாற்றியுள்ளாா். துணை விமானி கத்தியால் குத்தியதில் ஏற்பட்ட ரத்த வெள்ளத்திலும் போராடி, விமானத்தை பாதுகாப்பாக சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் தரையிறக்கி, பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ள அவரது வீரச் செயலுக்கு பாராட்டுகள்.

Advertisement

Advertisement

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் துணிச்சலும், கடமை உணா்வும் மிகுந்த பாராட்டுக்குரியது. காயமடைந்த நிலையிலும் தனது வலியைப் பொருட்படுத்தாமல், பயணிகளின் உயிரைக் காப்பதையே முதன்மையாகக் கொண்டு அவா் செயல்பட்ட விதம் உண்மையான வீரத்தின் அடையாளமாகும். அவரது மன உறுதியும், சமயோசிதமான செயல்பாடும் நூற்றுக்கணக்கான உயிா்களைக் காப்பாற்றி, மிகப்பெரிய அசம்பாவிதத்தைத் தவிா்க்க உதவியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments