நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!
ஃபிளைதுபை விமானத்தில் சக விமானியின் கத்திக்குத்து தாக்குதலுக்குள்ளான இந்திய விமானியின் உடல்நிலை குறித்து...
துபையில் இருந்து இஸ்ரேல் சென்ற விமானத்தில் சக விமானியால் கத்தியால் குத்தப்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு கடந்த புதன்கிழமை (செப். 30) காலை 174 பயணிகளுடன் ஃபிளை துபை விமானம் புறப்பட்டுச் சென்றது.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதை இயக்கிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை சக விமானி கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்றார். இதையடுத்து, அவரை எதிர்த்து விமானி ஸ்மித் சண்டையிட விமானம் கட்டுப்பாடின்றி வேகமாகக் கீழே சென்றதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, வேறு இரண்டு விமானிகள் விமானத்தை இயக்கி சௌதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கினர். பின்னர், தாக்கப்பட்ட இந்திய விமானி உடனடியாக தபூக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமானி ஸ்மித் மச்சாரின் உடல்நிலை குறித்து முழுமையான தகவலுக்குக் காத்திருப்பதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதாகவும், சௌதியிலுள்ள இந்தியத் தூதரகம் வியாழக்கிழமை (அக். 01) அறிவித்துள்ளது.
முன்னதாக, இஸ்ரேலியர்கள் பயணித்த அந்த விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் நோக்கத்துடன் ஓமன் நாட்டைச் சேர்ந்த சக விமானி இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அவரை எதிர்த்து இந்திய விமானி ஸ்மித் சண்டையிட்டு விமானி அறையின் கதவுகளைத் திறந்ததால் மற்ற பணியாளர்கள் மற்றும் பயணிகள் தக்க நேரத்தில் விமானத்தைத் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஹீரோ எனக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
It has been reported that the condition of Indian pilot Smith Machar, who was stabbed by a co-pilot on a flight from Dubai to Israel, is stable.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.