FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடி - விமானி ஸ்மித் மச்சார் பேசியது என்ன?

இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய உரையாடல் பற்றி...

விமானி ஸ்மித் மச்சார் | பிரதமர் மோடி - - ANI
பகிர்:

நடுவானில் துபை விமானத்தில் சக விமானியால் தாக்குதலுக்கு ஆளாகியும், விமானத்தைப் பாதுகாப்பாக தரையிறக்கி பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி இன்று விடியோ அழைப்பில் பேசினார்.

இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த ஃப்ளைதுபாய் விமான கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி இடையே குஜராத்தி மொழியிலும் பேசியுள்ளார்.

பிரதமர் மோடி பேசியது....

Advertisement

Advertisement

பிரதமர் மோடி பேசுகையில், "இன்று நாடு முழுவதும் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்து வருகிறது. உங்களுக்காகவும் உங்கள் உடல்நலத்திற்காகவும் நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. உங்களுடைய துணிச்சல், சமயோசித புத்தி, நிதானம் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. இந்தியர்கள், உயிரைப் பறிப்பவர்கள் அல்ல, மாறாக மற்றவர்களைக் காப்பாற்றத் தங்கள் உயிரையும் பணயம் வைக்கத் துணிந்தவர்கள் என்று இந்த நாடு பெருமையுடன் கூறலாம்.

நீங்கள் 'அஹிம்சை' என்றால் என்ன என்பதை உலகுக்குக் காட்டி இருக்கிறீர்கள். இதுவே சூழல் வேறாக இருந்திருந்தால் மக்கள் இந்தியாவைப் பற்றி என்ன சொல்லியிருப்பார்கள் என்று சமூக ஊடகங்களில் பல கருத்துகளை படித்தேன். நீங்கள் பெரிய காரியத்தைச் செய்து அனைவரையும் காப்பாற்றியிருக்கிறீர்கள். நீங்கள் இந்த ஒட்டுமொத்த நாட்டையும் பெருமைப்படுத்தி இருக்கிறீர்கள்.

உங்களையும் உங்களுடைய குடும்பத்தினரையும் நான் பாராட்டுகிறேன். உங்களை கவனித்துக்கொண்ட சௌதி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுகளுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் என்னை தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம். இந்த நாடு உங்களை வரவேற்க ஆவலாக இருக்கிறது" என்று கூறினார்.

ஸ்மித் மச்சார்

விமானி ஸ்மித் மச்சார் பேசும்போது, "உங்களுடன் பேச எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

எனக்கு வலி ஏற்படும்போதெல்லாம் நான் ஹனுமன் துதியைச் சொல்வது வழக்கம். விமானத்தில் அந்த இக்கட்டான சூழ்நிலையில்கூட, நான் ஹனுமன் துதியைத் தான் சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தத் தருணத்தில், விமானியின் அறைக்கான கதவைத் திறக்க நான் மிகுந்த முயற்சியை மேற்கொண்டேன். எனக்குப் பல காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், நான் எழுந்து செயல்பட வேண்டும் என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்.

இன்று உங்களுடைய தொலைபேசி அழைப்பு எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது. நீங்கள் எனக்கு மிகப்பெரிய முன்மாதிரி. இன்று நீங்கள் எனக்கு ஊக்கமளித்ததற்கு நன்றி" என்று கூறினார்.

summary

pride for India: PM Modi and Pilot Smith Machchaar conversation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments