FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து சம்பவம்: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!

இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து நடந்த சம்பவத்தில், சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி வெளியாகியிருக்கிறது.

அமீரக விமானம் - கோப்புப் படம்
பகிர்:

டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தின் இந்திய விமானி ஸ்மித் மச்சார் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி, 29 வயதான ஹமாம் அல்-ஹம்மாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்;

இவருக்கு, சிரியாவுடனான தொடர்பு மற்றும் தீவிரவாதக் கருத்துகளை கொண்டிருப்பவர் என்ற புதிய தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.

அல் அரபியா (Al Arabiya) ஊடகத்தில் வெளியான தகவல்களின்படி, அல்-ஹம்மாமி தனது நேரத்தின் பெரும்பகுதியை ஓமனுக்கு வெளியேயும், குறிப்பாக சிரியாவிலும் கழித்துள்ளார்; அங்கு அவர் தீவிரவாதக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது தீவிரவாதக் கண்ணோட்டங்கள் குறித்து அவர் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டிருந்ததும், இதன் காரணமாக ஓமன் நாட்டில் அவர் விமானங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

ஓமனில் தடை விதிக்கப்பட்ட நிலையில், அவர் ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து, அங்கு ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார்.

சம்பவத்தன்று என்ன நடந்தது?

துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி புறப்பட்ட விமானத்தில் சக விமானியால் கத்திக்குத்து காயமடைந்த போதிலும் துணிவுடன் போராடி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார் இந்திய விமானி ஸ்மித் மச்சார்.

விமானத்தை வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்க முயன்ற அந்த விமானியைப் பயணிகள் மடக்கிப் பிடித்ததால், சவூதி அரேபியாவில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் புதன்கிழமை புறப்பட்ட ஃபிளைதுபை நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ்' விமானத்தில் அரங்கேறிய இச்சம்பவம் உலகம் முழுவதையும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments