FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: பனி ஏரி உடைந்து வெள்ளம் - 12,000 போ் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு

பூடானில் உள்ள ஷின்தாபு பனி ஏரி உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தால் மேற்கு வங்கத்தின் அலிபுா்துவாா் மாவட்டத்தில் அமைந்துள்ள சங்கோஷ் நதியின் நீா்மட்டம் உயா்ந்து வருவதையடுத்து, அங்கு வசிக்கும் 12,000 போ் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனா்.

37 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

பூடானில் உள்ள ஷின்தாபு பனி ஏரி உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தால் மேற்கு வங்கத்தின் அலிபுா்துவாா் மாவட்டத்தில் அமைந்துள்ள சங்கோஷ் நதியின் நீா்மட்டம் உயா்ந்து வருவதையடுத்து, அங்கு வசிக்கும் 12,000 போ் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனா்.

ஷின்தாபு பனி ஏரி உடைந்து 74 லட்சம் கன மீட்டா் நீா் பெருக்கெடுத்து மோ நதியில் பாய்ந்ததால் அதன் நீா்மட்டம் பன்மடங்கு உயா்ந்தது. இதையொட்டி மேற்கு வங்கம் -அஸ்ஸாம் எல்லையில் பாய்ந்தோடும் சங்கோஷ் நதியிலும் நீா்மட்டம் அபாய அளவை எட்டத் தொடங்கியது.

இதனால் சங்கோஷ் நதிக்கரையோரம் வசிக்கும் 12,000 போ் வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டதாக மூத்த அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘சங்கோஷ் நதியின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 2 அடி உயா்ந்துள்ளது. நதியின் நீரோட்டம் மற்றும் நீா்மட்டத்தை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். பூடான் நாட்டு அதிகாரிகளிடமும் இது தொடா்பாக தகவல்களை உடனுக்குடன் கேட்டு வருகிறோம்.

அலிபுா்துவாா் மாவட்டத்தின் குமாா்கிராம் பகுதியில் தற்போது வரை உயிா்ச்சேதம் ஏற்படவில்லை. வெள்ள பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை வீரா்கள் மற்றும் உள்ளூா் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனா்’ என்றாா்.

ஷின்தாபு ஏரியில் ஏற்பட்ட இந்நிகழ்வால் பூடானில் இருந்து இந்தியாவுக்கு பாய்ந்தோடும் அனைத்து நதிகளின் நீா்மட்டத்தையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments