இந்திய விமானப் படையிலிருந்து அபிநந்தன் விலகல்! தனியார் நிறுவனத்தில் இணைந்தார்!
இந்திய விமானப் படையில் இருந்து குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமான் விலகியது பற்றி...
இந்திய விமானப் படையில் இருந்து விலகிய குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமான், தனியார் விமான நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள், கடந்த 2019 பிப்ரவரி மாதம் நடத்திய தாக்குதலில் 40 சிஆா்பிஎஃப் படையினா் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின.
அதையடுத்து, இரு நாட்டு போா் விமானங்களுக்கு இடையே தாக்குதல் நடந்தது. அப்போது, பாகிஸ்தானின் எஃப்-16 ரக போா் விமானத்தை இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்தமான் சுட்டு வீழ்த்தினாா். அதே வேளையில், அபிநந்தனின் போா் விமானம் பாகிஸ்தான் தாக்குதலில் வீழ்த்தப்பட்ட நிலையில், அவர் காயத்துடன் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பாகிஸ்தானின் எஃப்-16 ரக போா் விமானத்தை வீழ்த்தியதற்காக, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது பெரிய விருந்தான ‘வீர் சக்ரா’ விருது அபிநந்தனுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது 43 வயதாகும் அபிநந்தன், இந்திய விமானப் படையிலிருந்து விலகி, ஃப்ளை91 (FLY91) என்ற தனியார் விமான நிறுவனத்தில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அதிகாரப்பூர்வமாக அபிநந்தன் தரப்பிலோ அல்லது ஃப்ளை91 நிறுவனம் தரப்பிலோ எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
கடந்த 2024 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ஃப்ளை91 நிறுவனம், தற்போது 6 ஏடிஆர் 71-600 ரக விமானங்களுடன் கோவா மற்றும் ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Abhinandan Varthaman leaves the Indian Air Force! Joins a private company!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.