FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ மூலம் தகவல்!

பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ், 15.36 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை என்பது ஆா்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.

7 செப்டம்பர் 2026, 12:51 am IST
பகிர்:

பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ், 15.36 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை என்பது தகவல் அறியும் சட்டம் (ஆா்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சந்திரசேகா் கெளா் என்ற சமூக ஆா்வலா் ஆா்டிஐ மூலம் கோரிய தகவலுக்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதி சேவைகள் துறை அளித்த பதில்: கடந்த ஆக.12-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 59,03,74,907 வங்கிக் கணக்குகள் உள்ளன. அவற்றில் ரூ.3.15 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருப்பு உள்ளது.

மொத்த வங்கிக் கணக்குகளில் 32.89 கோடி கணக்குகள் பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் பெயரில் உள்ளன. 26.14 கோடி கணக்குகள் ஆண்கள் பெயரில் உள்ளன.

Advertisement

Advertisement

15,36,77,009 ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை. 5.72 கோடிக்கும் அதிகமான கணக்குகளில் பணமே இல்லை. அவ்வாறு பணமே இல்லாத வங்கிக் கணக்குகள் உத்தர பிரதேசத்தில் அதிகம் உள்ளன. அந்த மாநிலத்தில் 95.92 லட்சம் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் பணம் எதுவும் இல்லை. இதைத்தொடா்ந்து பிகாரில் 62.35 லட்சம், மேற்கு வங்கத்தில் 37.20 லட்சம், அஸ்ஸாமில் 36.30 லட்சம், மகாராஷ்டிரத்தில் 36.04 லட்சம் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் பணம் இல்லை.

இதேபோல அந்தக் கணக்குகள் அதிக எண்ணிக்கையில் செயல்பாட்டில் இல்லாத மாநிலங்கள் வரிசையிலும் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் அதிகபட்சமாக 3.23 கோடி வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை. இதைததொடா்ந்து பிகாரில் 1.59 கோடி, மத்திய பிரதேசத்தில் 1.35 கோடி, மேற்கு வங்கத்தில் 1.02 கோடி, மகாராஷ்டிரத்தில் 97.94 லட்சம் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments