10 பெண் சாதனையாளர்களுக்கு ஒடிசா தேவி விருதுகள்!
பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்காற்றிய 10 பெண் சாதனையாளர்களுக்கு ஒடிசா தேவி விருதுகள் வழங்கப்பட்டது பற்றி..
ஒடிசாவில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பிலான 'தேவி விருதுகள்' வழங்கும் விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பான செயல்பாடு, அர்ப்பணிப்பு மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய 10 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஒடிசா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தேவி விருதுகள் - 2026 விழா செப். 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஒடிசா துணை முதல்வர் பிரவதி பரிதா, பெண் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
தேவி விருது பெற்றவர்கள்!
ஒடிசி நடனக் கலைஞர், நடன அமைப்பாளர் அருணா மொஹந்தி, மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஷைனி எஸ், பட்டாசித்ர கலைஞர் லட்சுமி மெஹர், புகழ்பெற்ற எழுத்தாளர் பரமிதா சத்பதி, விஞ்ஞானியும் தொழில்முனைவோருமான சுமோனா கர்ஜீ மிஸ்ரா, மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானி பேராசிரியர் தேவஸ்மிதா பங்கஜ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும், நாடகக் கலைஞரும் நடிகையுமான சுஜாதா பிரியம்வதா சௌத்ரி, தொழில்முனைவோர் நினா சிங், சுற்றுச்சூழல் ஆர்வலரும் இயற்கை பாதுகாப்புப் பணியாளருமான நளினி கண்டி, பாரா - விளையாட்டு வீராங்கனை ஜெயந்தி பெஹெரா ஆகியோரும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விழாவில் விருதுகளை வழங்கிப் பேசிய ஒடிசா துணை முதல்வர் பிரவதி பரிதா, பெண்களை வெறும் நலத்திட்டங்களின் பயனாளிகளாக மட்டும் பார்ப்பதிலிருந்து மாறி, அவர்களை வளர்ச்சிப் பணிகளில் பங்காளிகளாகவும் தலைவர்களாகவும் முன்னெடுத்துச் செல்பவர்களாகவும் அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
ஒடிசா இலக்கியத் திருவிழா
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் ஒடிசா இலக்கியத் திருவிழா, செப்டம்பர் 5, 6 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
புவனேசுவரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த திருவிழாவில், இலக்கியம், கலை, இசை மற்றும் சினிமா தொடர்பான பல்வேறு தலைப்புகளின் கீழ் பல துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
At the Devi Awards ceremony held in Bhubaneswar on behalf of The New Indian Express Group, 10 women achievers were honoured with awards.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.