காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி!
ஆசிய விளையாட்டில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வியுற்றது குறித்து...
ஆசிய விளையாட்டில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி (33 வயது) தோல்வியுற்றது ஏமாற்றம் அளித்தார்.
ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியா 1 தங்கம் உள்பட மொத்தமாக 14 பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டின் ஐந்தாவது நாளான இன்று இந்தியாவுக்கு ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. தமிழக வாள்வீச்சு வீராங்கனை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் சீன வீராங்கனை ராவ் சூயி உடன் மோதினார்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் 5-15 என சீன வீராங்கனையிடம் தோல்வியுற்று பவானிதேவி வெளியேறினார். வாள்வீச்சு உலக சாம்பியன்ஷிப் 2026ல் ராவ் சூயி வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் மங்கோலிய வீராங்கனையை 15–8 என்ற புள்ளிக் கணக்கில் பவானி தேவி வீழ்த்தியிருந்தார்.
தமிழக முதல்வர் விஜய்யுடன் சேர்ந்து பவானி தேவி போதைப்பொருள் ஒழிப்பிற்கான மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Fencing: Bhavani Devi lost to 2026 Worlds silver medallist Rao Xueyi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.