FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இடைத்தேர்தலில் திருப்பம்! நந்திகிராம் வேட்பாளர் வாபஸ்; காங்கிரஸுக்கு மமதா ஆதரவு!

மேற்கு வங்க இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக மமதா பானர்ஜி தரப்பு அறிவிப்பு...

18 செப்டம்பர் 2026, 6:52 pm IST
மமதா பானர்ஜி - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - கோப்புப் படம் | ANI
பகிர்:

மேற்கு வங்கத்தின் நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மமதா பானர்ஜியின் தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பெரும்பாலான மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தனி அணியை உருவாக்கியுள்ளனர்.

இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் முடக்கியது. மேலும், நடைபெறவுள்ள நந்திகிராம் இடைத்தேர்தலில் இருதரப்புக்கும் தனித்தனி சின்னங்கள் மற்றும் பெயர்கள் ஒதுக்கப்பட்டன.

Advertisement

Advertisement

மமதா பானர்ஜி பிரிவுக்கு ‘மமதா அனைத்திந்திய திரிணமூல் காங்கிரஸ்’ எனும் பெயரும், கால்பந்து வீரர் சின்னமும் ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து, நந்திகிராம் தொகுதியில் மமதா பிரிவால் களமிறக்கப்பட்ட வேட்பாளர் சஞ்சிதா பிரதான் டே தனது வேட்புமனுவை இறுதிநாளான இன்று (செப். 18) வாபஸ் பெற்றார். மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடனான சந்திப்புக்குப் பிறகு அவர் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மமதா தரப்பு வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகியதால் இடைத்தேர்தலில் நந்திகிராம் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக, முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி பவானிப்பூர் மற்றும் நந்திகிராம் தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர், நந்திகிராம் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை அவர் ராஜிநாமா செய்ததால் அங்கு வரும் அக்.6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Mamata Banerjee has announced her support for the Congress candidate in by-election for the Nandigram constituency in West Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments