FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தியாவின் ஜிடிபி ரூ. 300 லட்சம் கோடியாக உயரும்: அஜித் தோவல் நம்பிக்கை!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடுத்த 20 ஆண்டுகளில் ரூ. 300 லட்சம் கோடியாக உயரும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார்.

52 வினாடிகள் முன்பு
அஜித் தோவல்
பகிர்:

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடுத்த 20 ஆண்டுகளில் ரூ. 300 லட்சம் கோடியாக உயரும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார்.

ஐஐடி ரூர்க்கி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று கலந்துகொண்டார். அங்கு மாணவர்களுடன் பேசிய அவர், “மாணவர்கள் ஒரு மாற்றத்தை உருவாக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து வருவது அவர்களின் அதிர்ஷ்டம். அவர்களுடைய எதிர்காலம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது.

மாணவர்கள் அனைவரும் வாழ்வில் துணிச்சலுடன் இருக்கவேண்டும். ஸ்ரீ ராமரின் துணிச்சலான குணம் காரணமாகவே, அரக்கர்களை அழிக்க முனிவர் விஸ்வாமித்திரர் அவரைத் தேர்ந்தெடுத்தார்” என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

மேலும், “இந்தியாவில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நமது நாடு ஒரு மகத்தான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது.

வருகிற 2047 ஆம் ஆண்டு வரையிலான காலத்தை நமது பிரதமர் அமிர்த காலம் என்று அழைத்துள்ளார். இது உண்மையில் ஒரு அற்புதமான ‘அமிர்த காலமாக’ இருக்கும்.

இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.015 டிரில்லியன் அமெரிக்க டாலராக (ரூ. 33.50 லட்சம் கோடி) உள்ளது. இது அடுத்த 20 ஆண்டுகளில் 38 டிரில்லியன் அமெரிக்க டாலராக (ரூ. 300 லட்சம் கோடி) உயரும்” என்று குறிப்பிட்டார்.

அஜித் தோவல் சிக்கிமில் பணியாற்றிய தனது ஆரம்பகால பணி அனுபவம் பற்றிப் பேசுகையில் அவருக்கு நேபாளத்தின் ஷெர்பா இனத்தைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய அறிவுரை பற்றிக் கூறினார்.

அதில், “அவர் எனக்கு வாழ்வில் வெற்றி பெற 3 மந்திரங்களை கற்றுத் தந்தார். முதல் மந்திரம், நாம் வரைபடத்தில் எங்கே இருக்கிறோம் என்று அறிவது. இரண்டாவது மந்திரம், நாம் எங்கு செல்லவேண்டும் என்பதை அறிவது. மூன்றாவது மந்திரம், அங்கு சென்று திரும்புவதற்கான வழியை அறிவது” என்று தெரிவித்தார்.

summary

National Security Advisor Ajit Doval stated that India's Gross Domestic Product (GDP) would rise to Rs 300 lakh crore over the next 20 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments