செமிகண்டக்டா் துறையினா் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்
செமிகண்டக்டா் துறையினா் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் எச்சரிக்கை விடுத்திருப்பது குறித்து...
புது தில்லி: செமிகண்டக்டா் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை விரும்பாத நாடுகளிடம் இருந்து வரக்கூடிய இடையூறுகள், இணையவழி தாக்குதல்கள் மற்றும் எந்தவொரு இடையூறுகளுக்கும் இந்த துறையினா் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் எச்சரித்துள்ளார்.
மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,
பல நாடுகள் இந்தியாவை நம்பகமான கூட்டாளியாகக் கருதி, தங்களின் பொருள்களை இங்கேயே உற்பத்தி செய்கின்றன. செமிகண்டக்டா் வடிவமைப்பு, உற்பத்தி திறனுடன் இந்த துறையில் வல்லமைமிக்க நாடாக இந்தியா உருவெடுத்து வருவதால், அதனால் ஏற்படக்கூடிய புவிசார் அரசியல் அபாயங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.
Advertisement
Advertisement
இந்தியாவின் எழுச்சியை உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்கெனவே நிலைபெற்ற சக்திகள் தங்களுக்கு அச்சுறுத்தலாக கருதக் கூடும். எனவே, சக போட்டியாளா்களிடம் இருந்து வர வாய்ப்புள்ள இடையூறுகள் மற்றும் இணையவழி தாக்குதல் குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும். இத்தகைய இடையூறுகள் மற்றும் இணையவழி தாக்குதல்களுக்கு எதிராக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எச்சரித்தார்.
இந்த அச்சுறுத்தல்களைத் தவிர்க்கவும் எதிர்கொள்ளவும் செமிகண்டக்டா் துறை, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.
மேலும், உலகளாவிய செமிகண்டக்டா் மதிப்பு சங்கிலியில் தனது விரிவான இருப்பைக் கட்டமைக்க இந்தியா முனைந்து வருகிறது. நாட்டின் தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி சாா்ந்த இலக்குகளுக்கு இந்த துறை முக்கியமானதாகும்.
நாடு தற்போது சிப் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்து வருவதால், உலகளாவிய சந்தையில் இருக்கும் பிறநிறுவனங்கள் இதனை ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கக்கூடும். எனவே, இந்த துறையில் புவிசார் அரசியல் ரீதியான சவால்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.
செமிகண்டக்டா் ஆலைகள் மற்றும் உபகரண ஆலைகள் அமைக்கப்படும் ஆரம்பக் கட்டத்திலிருந்தே பாதுகாப்பு கட்டமைப்புகளை மிக வலுவாக உருவாக்க வேண்டும்.
புதிய ஒருங்கிணைப்பு - பரிசோதனை மட்டுமல்லாமல் வடிவமைப்பு, உபகரணங்கள், மூலப்பொருள்கள் உற்பத்தி என ஒட்டுமொத்த கட்டமைப்பையும் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அஸ்வினி கூறினார்.
semiconductor industry should be prepared for cyberattacks Information and Broadcasting Minister Ashwini Vaishnaw has cautioned
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.