வந்தேமாதரம் பாடலை முழுவதும் பாடாவிட்டால் தண்டனை விதிக்கக்கூடாது! உச்ச நீதிமன்றம்!
வந்தே மாதரம் பாடலை பற்றி உச்ச நீதிமன்றத்தின் அதிரடி...
தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடாவிட்டால் தண்டனை விதிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வந்தே மாதரம் 6 சரணங்களையும் பாடுவதைக் கட்டாயமாக்கும் தண்டனைச் சட்டத்தை எதிர்த்து கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், பாடலை முழுமையாகப் பாடாதவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.
வந்தே மாதம் பாடலின் ஆறு சரணங்களையும் கட்டாயம் பாட வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கை மற்றும் அப்பாடலுக்குத் தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து வழங்கும் சமீபத்திய சட்டத் திருத்தத்தை எதிர்த்து கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா தாக்கல் செய்தார்.
Advertisement
Advertisement
அவர் தாக்கல் செய்த மனுவில், வந்தே மாதரம் பாடலின் முதல் நான்கு சரணங்கள் இந்து தெய்வங்களை உணர்வை வெளிப்படையாக வலியுறுத்துகின்றன. எனேவ, அப்பகுதிகளைக் கட்டாயம் பாட வேண்டும் என்று உத்தரவிடுவது நாட்டின் நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு முரணானது என்று மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை மூத்த வழக்குரைஞர் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த அமர்வு வந்தே மாதரம் தேசியப் பாடல் என்பதில் எந்த ஐயமும் இல்லை. வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடாவிட்டால் தண்டனை விதிக்கக்கூடாது, தண்டனை என்பதை மாற்ற அடிப்படை உரிமை விதியின் கீழ் பரிசீலிக்கலாம்.
கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.