FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! டிரம்ப்பை சந்திக்கிறார்!!

ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியைப் பற்றி...

27 வினாடிகள் முன்பு
பிரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப்.
பகிர்:

ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற டிசம்பரில் அமெரிக்கா செல்லவுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் நேஷனல் டோரா மியாமி ரிசார்ட்டில் ஜி20 மாநாடு வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது.

பல்வேறு உலகத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமை தாங்கும் நிலையில், மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, டிச.14, 15 ஆகிய இரண்டு நாள்கள் அமெரிக்கா பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

வழக்கமாக பிரதமர் மோடியின் பயணம் குறித்த அறிவிப்புகள், தேதிக்கு நெருங்கிய நாள்களில் வெளியிடப்படும் என்பதால் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

summary

PM Modi is expected to travel to the US for the December 14-15 G20 Summit in Florida, with a possible Quad meeting and bilateral talks with Donald Trump, followed by a likely visit to Canada.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments