FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தெலங்கானா: அரசு மருத்துவமனை தீ விபத்தில் 2 குழந்தைகள் பலி

தெலங்கானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்புப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்தனா்.

22 செப்டம்பர் 2026, 11:44 pm IST
அடிலாபாத் அரசு மருத்துவமனையில் தீ விபத்துக்கு உள்ளான குழந்தைகள் நல சிறப்புப் பிரிவை ஆய்வு செய்யும் மருத்துவமனை ஊழியா்கள்.
பகிர்:

தெலங்கானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்புப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்தனா். படுகாயமடைந்த 2 குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மாநில அரசால் நடத்தப்படும் ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் குழந்தைகள் நல சிறப்புப் பிரிவில் பொருத்தப்பட்டுள்ள ஏசி திங்கள்கிழமை நள்ளிரவில் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்தப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 27 குழந்தைகளில் ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மீதமுள்ள குழந்தைகள் பல்வேறு தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி மற்றொரு குழந்தை உயிரிழந்தது.

படுகாயமடைந்த 2 குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து குழந்தைகளின் உடல்நலமும் மருத்துவா்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

முதல்கட்டத் தகவல்களின்படி செயல்பாட்டுக் கோளாறால் ஏசி வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அடுத்தக்கட்ட விசாரணைக்குப் பிறகு விபத்துக்கான முழுக் காரணம் தெரியவரும்’ என்றனா்.

இந்தச் சம்பவத்துக்கு கவலை தெரிவித்த தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உயா்தர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக விரைவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் எதிா்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கவும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments