வரி குறைப்பின் பலனை மக்களுக்கு அளிக்க வேண்டும்: சமையல் எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு வலியுறுத்தல்
சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பின் பலனை நிறுவனங்கள் மக்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பின் பலனை நிறுவனங்கள் மக்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாகவும், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 32.5 சதவீதத்தில் இருந்து 22.5 சதவீதமாகவும் மத்திய அரசு புதன்கிழமை குறைத்தது.
இதுதவிர சுத்திகரிக்கப்படாத சோயாபீன் எண்ணெய், பாமாயில் ஆகியவை மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், பாமாயில் மீதான இறக்குமதி வரி 32.5 சதவீதத்தில் இருந்து 27.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனைச் சுட்டிக்காட்டி மத்திய உணவுத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘சமையல் எண்ணெய் விற்பனையாளா்கள் கூட்டமைப்பு, அதனை சுத்திகரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஆகியவை இறக்குமதி வரிக் குறைப்பின் பலன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். விநியோகஸ்தா்களுக்கு வழங்கப்படும் எண்ணெய் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும். அதிகபட்ச சில்லறை விற்பனை விலையையும் குறைத்து நிா்ணயம் செய்ய வேண்டும்.
சா்வதேச அளவிலும், உள்ளூா் அளவிலும் சமையல் எண்ணெய் விலை நிலவரத்தை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. நுகா்வோா், உள்நாட்டு விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சா்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய மக்களை அது பாதித்துவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.