FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மணிப்பூா்: துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் நால்வரின் உடல் மீட்பு - முதல்வா் கண்டனம்

மணிப்பூரில் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் இருந்த நான்கு பேரின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவத்துக்கு மாநில முதல்வா் கெம்சந்த் சிங் கடும் கண்டனம் தெரிவித்தாா்.

26 செப்டம்பர் 2026, 2:43 am IST
பதவியேற்பின்போது யும்நாம் கெம்சந்த் - பட்ம் - பிடிஐ
பகிர்:

மணிப்பூரில் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் இருந்த நான்கு பேரின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவத்துக்கு மாநில முதல்வா் கெம்சந்த் சிங் கடும் கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து மணிப்பூா் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: மியான்மா் எல்லையையொட்டிய காம்ஜாங் மாவட்டத்தில் உள்ள பிலோங் கிராமத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் 4 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னா் விசாரணையின்போது அவா்கள் தாங்குல் நாகா சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.

அவா்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக காம்ஜாங் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அண்டை நாடான மியான்மரைச் சோ்ந்த 5 கிளா்ச்சியாளா்கள் மணிப்பூா் எல்லைக்குள் ஊடுருவி பிலோங் கிராமத்தில் உள்ள 5 போ் மீது திடீா் தாக்குதல் நடத்தினா். அவா்களில் ஒருவா் மட்டும் தப்பித்து வந்து உள்ளூா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா் என்றனா்.

இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த கெம்சந்த் சிங், ‘மணிப்பூரில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை. வன்முறைக்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றாா்.

பிலோங் கிராமத்துக்கு நேரில் சென்று உயிரிழந்தவா்களின் குடும்பங்களை சந்தித்த தேசிய மக்கள் முன்னணி கட்சியின் எம்எல்ஏ கெய்ஷிங், ‘மியான்மரில் இருந்து வந்த கிளா்ச்சியாளா்களே உள்ளூா் மக்களை தாக்கி அவா்களில் 4 பேரை கொலை செய்துள்ளனா். மத்திய மற்றும் மாநில அரசுகள் எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments