FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நாகாலாந்தில் கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் பலி!

மதுவிலக்கு சட்டம் அமலில் இருந்தும் நாகாலாந்தில் கள்ளச் சாராயம் கொடூரம்..

13 வினாடிகள் முன்பு
கள்ளச்சாராயம்
பகிர்:

நாகாலாந்து மாநிலத்தில் கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகாலாந்தில் 1990-ஆம் ஆண்டு முதல் மதுவிலக்குச் சட்டம் அமலில் உள்ள நிலையில், கடந்த இரண்டு நாள்களில் கள்ளச் சாராயம் குடித்து மொகோக்சுங் மாவட்டத்தில் 8 பேரும், துயென்சாங் மாவட்டத்தில் 11 பேரும் என மொத்தம் 19 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்கச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய, மது மாதிரிகள் குவாஹாத்தியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

அடையாளம் தெரியாத, லேபிள் இல்லாத, சந்தேகத்திற்குரிய சட்டவிரோத மதுவை அருந்துவதைத் தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மது அருந்திய பிறகு தலைச்சுற்றல், மங்கலான பார்வை, மூச்சுத் திணறல், சுயநினைவு இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் காவல் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments