FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிஎம்ஆர்எல் விசாரணை எல்டிஎஃப்-ஐ குறிவைக்கும் அரசியல் சதி! பினராயி விஜயன்

பாஜக தூண்டுதலின் பேரில் சிஎம்ஆர்எல் விசாரணை பற்றிபினராயி விஜயன் குற்றச்சாட்டு...

26 செப்டம்பர் 2026, 2:04 pm IST
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் - கோப்புப் படம்
பகிர்:

கேரளத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணியை (எல்டிஎஃப்) குறிவைக்கும் நோக்கிலேயே சிஎம்ஆர்எல் தொடர்பான விசாரணை நடத்தப்படுவதாக கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆலப்புழாவில் நடைபெற்ற விரிவுபடுத்தப்பட்ட சிபிஐ (எம்) மாவட்டக் குழுக் கூட்டத்தை பினராயி விஜயன் தொடங்கிவைத்துப் பேசினார். தன்னைக் குறிவைப்பதன் மூலம் தனது கட்சியையும் இடதுசாரி முன்னணியையும் குறிவைப்பதில் காங்கிரஸும் பாஜகவும் கைகோர்த்துள்ளது.

எக்ஸாலஜிக் மற்றும் சிஎம்ஆர்எல் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் இருந்ததாகவும், சட்டத்திற்கு உட்பட்டே சேவைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement

ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்திற்குச் சட்டப்படி சேவையை வழங்கியுள்ளது. அந்தச் சேவைக்கான ஊதியமும் சட்டப்படியே பெறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான அனைத்து வரிகளும் முறையாகச் செலுத்தப்பட்டுள்ளன.

"இதில் என்ன குற்றம் இருக்கிறது?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

எக்ஸாலஜிக் நிறுவனத்தின் உரிமையாளர் தனது மகள் என்பதால்தான் அதுகுறித்த கேள்விகள் எழுப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார். விசாரணையைக் கண்டு தான் அஞ்சவில்லை. இதையெல்லாம் நான் முன்பே பார்த்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments