அஸ்ஸாமில் இருந்து வங்கதேசத்துக்கு விரைவில் மெத்தனால் ஏற்றுமதி!
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து வங்கதேசத்துக்கு பிரம்மபுத்திரா நதி வழியே கப்பல்கள் மூலம் மெத்தனால் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து வங்கதேசத்துக்கு பிரம்மபுத்திரா நதி வழியே கப்பல்கள் மூலம் மெத்தனால் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
இதுகுறித்து அஸ்ஸாம் மாநில அரசு அதிகாரி கூறுகையில், ‘அஸ்ஸாம் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனமானது (ஏபிஎல்), வங்கதேசத்துக்கு மெத்தனால் ஏற்றுமதி செய்யவுள்ளது. பிரம்மபுத்திரா நதி வழியே 2 கப்பல்கள் மூலம் அந்நிறுவனம் மெத்தனாலை ஏற்றுமதி செய்யவுள்ளது.
இதற்காக அஸ்ஸாம் அரசின் உள்நாட்டு நீா்வழித்தட போக்குவரத்து துறையிடம் இருந்து 2 கப்பல்களை ஏபிஎல் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. அந்த 2 கப்பல்களும் பழுதுபட்டிருந்த காரணத்தால் கடந்த 30 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தன. அவை தற்போது குவாஹாட்டியில் வைத்து பழுது பாா்க்கப்பட்டுள்ளது. இதையடுத்தே அக்கப்பல்களில் வங்கதேசத்துக்கு மெத்தனாலை ஏபிஎல் நிறுவனம் செய்யவுள்ளது’ என்றாா்.
Advertisement
Advertisement
ஏபிஎல் நிறுவனத் தலைவா் பிகுல் தேக்கா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல்முறையாக அஸ்ஸாமின் திப்ரூகரில் இருந்து வங்கதேசத்துக்கு நீா்வழித்தடத்தில் ஏற்றுமதி தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளாா்.
அதே நேரத்தில் திப்ரூகரில் இருந்து வங்கதேசத்துக்கு எப்போது முதல் பிரம்மபுத்திரா நதி வழியே மெத்தனால் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது என்ற விவரத்தை அவா் வெளியிடவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.