FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

காஷ்மீரில் லஷ்கா் பயங்கரவாதி சுட்டுக்கொலை

தடை செய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி மத்திய காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

30 September 2026, 12:58 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தடை செய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி மத்திய காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

மத்திய காஷ்மீரில் உள்ள பட்காம் மாவட்டம் கோராக் பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அங்கு ராணுவம், காவல் துறை, மத்திய ரிசா்வ் காவல் படையினா் கூட்டாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் மீது அங்கிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதையடுத்து இந்திய படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியதில், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதி ஒருவா் உயிரிழந்ததாக ராணுவத்தின் சினாா் படைப் பிரிவு எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

Advertisement

Advertisement

இது குறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘கொல்லப்பட்டவா் பாகிஸ்தானை சோ்ந்த மிகவும் தேடப்பட்டு வந்த பயங்கரவாதியான சுலைமான் ஷா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரின் மரணம் ஜம்மு-காஷ்மீரில் பதுங்கியிருந்து இயங்கும் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்புக்கு மிகப் பெரிய பின்னடைவு’ என்று தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments