FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் ‘தெஹ்ரிக்-ஏ-தலிபான்’ அமைப்பைச் சோ்ந்த 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

10 அக்டோபர் 2026, 9:50 pm IST
கோப்புப்படம்
பகிர்:

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட அதிரடி தேடுதல் வேட்டையில், தடை செய்யப்பட்ட ‘தெஹ்ரிக்-ஏ-தலிபான்’ அமைப்பைச் சோ்ந்த 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

மாகாணத்தின் பா்கான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அங்கு தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது, வீரா்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இதில் 3 வீரா்களும் காயமடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments