FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாகிஸ்தானில் 4 நாள்களில் 73 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் கடந்த 4 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் 73 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

27 செப்டம்பர் 2026, 9:39 pm IST
- கோப்புப் படம்
பகிர்:

பாகிஸ்தானின் மிகவும் கொந்தளிப்பான பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 4 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் 73 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாக். ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான 'இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ்' வெளியிட்ட உளவுத்துறை தகவல்களின்படி, பலூசிஸ்தான் தலைநகரான குவெட்டாவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தது.

இதேபோல ஜியாரத், தும்ப் மற்றும் நோஷ்கி மாவட்டங்களிலும் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

Advertisement

குவெட்டாவில் ஷபான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட 33 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், அவர்களது வசிப்பிடங்கள் அழிக்கப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜியாரத் மாகாணத்தில் செப். 21 அன்று தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில் 23 பேர் வரை கொல்லப்பட்டனர். நோஷ்கி மாவட்டத்தில் 11 பேரும், மண்ட் பகுதியில் 6 பேரும் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து பெருமளவிலான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தடைசெய்யப்பட்ட 'தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்' என்ற பயங்கரவாத அமைப்பைக் குறிக்க பாகிஸ்தான் ’ஃபித்னா அல்-கவாரிஜ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. அந்தக் குழுக்களின் உறுப்பினர்களைக் குறிவைத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ராணுவம் குறிப்பிட்டது.

அதேநேரம், பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஆப்கன் தலிபான் அரசின் தலையீடு இருப்பதாகவும் ராணுவம் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆப்கன் அரசிடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை.

ஆப்கன் எல்லையை ஒட்டியுள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளை இலக்கு வைத்து பல்வேறு பயங்கரவாதக் கும்பல்களின் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

summary

73 terrorists were killed in counter-terrorism operations carried out in Pakistan over the past four days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments