FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு: நீரவ் மோடியின் உதவியாளர் கைது!

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் நீரவ் மோடியின் உதவியாளர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி / நீரவ் மோடி
பகிர்:

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் நீரவ் மோடியின் உதவியாளர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள நீரவ் மோடி மற்றும் அவரது உதவியாளர் சந்தீப் மிஸ்திரி ஆகியோர் சிபிஐ-யால் தேடப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட நீரவ் மோடியின் உதவியாளர் சந்தீப் மிஸ்திரியை சிபிஐ மும்பையில் கைது செய்து கட்டுப்பாட்டில் எடுத்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே முக்கிய தொடர்பாளராகச் செயல்பட்ட மிஸ்திரி அவற்றின் அன்றாட நடவடிக்கைகளைக் கவனித்து வந்ததுடன், ஆதாரங்களை மறைக்க ரகசியமான மற்றும் தானாக அழியும் தகவல் தொடர்பு தளங்கள் மூலம் அவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி வந்ததாக சிபிஐ தெரிவித்தது.

மேலும் வைரம், தங்கம் மற்றும் முத்து போன்ற ஆபரணங்கள் போலி வர்த்தகம் நடைபெறுவதாகக் காட்டுவதற்கு, போலி ஏற்றுமதி - இறக்குமதி ஆவணங்களைத் தயாரிக்க அவர் உதவியதாகவும் கூறப்படுகிறது.

சிபிஐ தெரிவித்த தகவலின்படி, மிஸ்திரியும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களும் வெளிநாட்டு நிறுவனங்களின் பெயரளவு இயக்குநர்களாக உள்ள ’டம்மி இயக்குநர்கள்’ பலரை மிரட்டி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

அவர்களைக் கைது செய்வதாக அச்சுறுத்தி, இடமாற்றம் செய்வது, மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்வது, அந்த நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர் எனக் காட்டும் பொய்யான ஆவணங்களில் கையெழுத்திட வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுபோன்று உள்ள டம்மி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து அவர் முறைகேடாக பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.

மும்பையில் சிபிஐ பதிவு செய்த இந்த வழக்கு, சர்வதேச போலி வர்த்தகப் பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது. இதுதொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிபிஐ வைத்த கோரிக்கையின் பேரில், ஜூலை 2026-ல் இன்டர்போல் மூலம் சந்தீப் மிஸ்திரிக்கு எதிராக ரெட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. பின்னர், அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்த ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் அவரைக் கைது செய்து நாடு கடத்தினர்.

நோட்டீஸ் வெளியிடப்பட்ட இரு மாதங்களிலேயே மிஸ்திரி கண்டறியப்பட்டு இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். இந்த நடவடிக்கையில் வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் சிபிஐ இணைந்து செயல்பட்டது.

summary

Nirav Modi's aide was extradited from the United Arab Emirates and arrested in connection with the Punjab National Bank fraud case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments