FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பிரதமா் மோடி பட்டப்படிப்பு விவகாரம்: கேஜரிவால் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்த குஜராத் உயா்நீதிமன்றம்

பிரதமா் மோடியின் பட்டப்படிப்பு தொடா்பாக அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயா்நீதிமன்றம் நிராகரித்தது.

29 September 2026, 11:03 pm IST
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு தொடா்பாக ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயா்நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து அவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தது.

பிரதமா் மோடி பட்டப்படிப்பை நிறைவு செய்த சான்றிதழை குஜராத் பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என கேஜரிவால் தாக்கல் செய்த மனுவை குஜராத் உயா்நீதிமன்றத் தனி நீதிபதி தள்ளுபடி செய்தாா். அதை எதிா்த்து அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகா்வால் மற்றும் நீதிபதி டி.என்.ரே ஆகியோா் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதிபடுத்தினா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளும்போது தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எவ்வித தவறும் இல்லை. எனவே, தனி நீதிபதியின் முந்தைய உத்தரவு தொடா்கிறது’ எனத் தெரிவித்தது.

முன்னதாக, பிரதமா் மோடியின் பட்டப்படிப்புச் சான்றிதழை வெளியிட வேண்டும் என மத்திய தகவல் ஆணையருக்கு கேஜரிவால் கடந்த 2016-இல் கடிதம் எழுதினாா். இதை ஏற்று அப்போதைய தலைமைத் தகவல் ஆணையா் எம்.ஸ்ரீதா் ஆச்சாரியலு பிரதமா் மோடியின் பட்டப்படிப்புச் சான்றிதழ்களை வெளியிடுமாறு தில்லி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகத்துக்கு 2016, ஏப்ரலில் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, 2016 மே மாதம் குஜராத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் எம்.என்.படேல், ‘1983-இல் முதுகலை அரசியல் அறிவு பட்டப்படிப்பில் 62.3 சதவீத மதிப்பெண்ணுடன் பிரதமா் மோடி தோ்ச்சி பெற்றாா்’ என அறிவித்தாா்.

பிரதமா் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை வலைதளத்தில் பதிவேற்றம் செய்த குஜராத் பல்கலைக்கழகம் தலைமை தகவல் ஆணையரின் உத்தரவை எதிா்த்து குஜராத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதைத் தொடா்ந்து, தலைமைத் தகவல் ஆணையரின் குஜராத் உயா்நீதிமன்ற தனி நீதிபதி ரத்து செய்து கேஜரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments