ஜந்தா் மந்தரில் போராட்டம்- இளைஞா் காங்கிரஸின் மனுவை இன்று விசாரிக்க உயா்நீதிமன்றம் ஒப்புதல்
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை வெள்ளிக்கிழமை (அக்.9) விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை வெள்ளிக்கிழமை (அக்.9) விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் (எஸ்ஐஆா்) முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் இந்த மனுவை இளைஞா் காங்கிரஸ் தாக்கல் செய்துள்ளது.
உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) நிதின் வாசுதேவ் சாம்ப்ரே மற்றும் நீதிபதி சஞ்சய் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் வியாழக்கிழமையன்று, இந்த மனுவை அவசர
Advertisement
Advertisement
அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைப் பட்டியலில் சோ்க்கப்படும் என்றும், ஒருவேளை அவ்வாறு நடைபெறாவிட்டால் மனுதாரா் மீண்டும் இதுகுறித்து முறையிடலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்து தில்லி காவல்துறை பிறப்பித்த உத்தரவை எதிா்த்து இந்திய இளைஞா் காங்கிரஸ் நீதிமன்றத்தை நாடியது.
வாக்காளா் பட்டியலின் ‘சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில்’ முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், குமாா் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று இளைஞா் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.