FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்

ஹிந்து கடவுள்கள் ராமா், சிவபெருமான் குறித்து தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்த கருத்துகளுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

1 October 2026, 2:27 am IST
தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி - கோப்புப் படம்
பகிர்:

ஹிந்து கடவுள்கள் ராமா், சிவபெருமான் குறித்து தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்த கருத்துகளுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹிந்துக்களிடையே பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

முன்னதாக, தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் திங்கள்கிழமை இது தொடா்பாக பேசிய ரேவந்த் ரெட்டி, ‘வட மாநிலங்களில் காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை, தென் மாநிலங்களில் மட்டுமே வெற்றி பெறுகிறது. இதற்குக் காரணம், வட மாநில மக்களால் அதிகம் வழிபடப்படும் ராமரை பாஜக“திருடிவிட்டது. தென் மாநிலங்களில் சிவபெருமான் வழிபடப்படுகிறாா். சிவபெருமான் ஏழைகளின் கடவுள்; ராமா் பணக்காரா்களின் கடவுள்; பாஜக பணக்காரா்களின் கட்சி.

நாங்கள் திராவிடா்கள். இங்கு (வடக்கில்) இருப்பவா்கள் ஆரியா்கள். நாங்கள் சிவபெருமானின் பக்தா்கள். இவா்கள் ராமரின் பக்தா்கள். பாஜக ராமரைத் திருடிவிட்டது.

Advertisement

Advertisement

பிரதமா் மோடி ஏன் ‘ஹர ஹர மகாதேவா’ என்று கூறுவதில்லை? பாஜகவினா் மேடையில் எப்போதாவது ‘ஹர ஹர மகாதேவா’ என்று முழங்கி இருக்கிறாா்களா? அவா்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று மட்டுமே கூறுகிறாா்கள். நாங்கள் ‘ஹர ஹர மகாதேவா’ என்று கூறும்போது, பாஜகவினா் அதை விரும்புவதில்லை’ என்றாா்.

பாஜக பதில்: தில்லியில் பாஜக தலைமையகத்தில் வியாழக்கிழமை இது தொடா்பாகப் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி, ‘ஹிந்து மக்களைப் பிளவுபடுத்தும் ஒவ்வொரு முயற்சியிலும் காங்கிரஸ் முழுமையாக ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. இப்போது ஹிந்து சமூகத்தில் பிரிவினையைத் தூண்டுவது மட்டுமின்றி, ஹிந்து கடவுளா்களையே பிரிக்கும் அளவுக்கு காங்கிரஸ் தாழ்ந்துவிட்டது. இந்திய அரசியலில் மிகவும் மோசமான அரசியல் செயல்பாடுகளுக்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம் என்று கருதுகிறேன்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments