இலைகளின் இனிய பணி
எண்ண முடியா இலைகள் கொண்டே எல்லாச் செடிகளும்
எண்ண முடியா இலைகள் கொண்டே
எல்லாச் செடிகளும்
வண்ணப் பசுமை உடைகள் பூண்டே
Advertisement
Advertisement
உவகை காட்டுதே!
-
இலைகள் எல்லாம் இரவி நோக்கி
ஒளியை வாங்கியே
இனிமை மிக்கப் பச்சை யத்தை
உணவாய் ஆக்குதே!
-
ஆக்கிய உணவை ஆசை யோடு
யாருக்கு ஊட்டுது?
தூக்க மின்றி தம்மை வளர்த்தத்
தண்டிற்கு ஊட்டுதே!
-
தனக்குக் கிடைத்த நல்ல உணவால்
தண்டும் மகிழ்ந்தே
கணக்கே இன்றி பூவுக்கும் காய்க்கும்
கிளைக்கு அனுப்புதே!
-
நாமும் இந்த இலைகள்போல
நல்லன செய்தால்
நாளும் வளங்கள் நாட்டில் பெருகி
நமக்கே ஆகுமே!
எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.