இது தெரியுமா? தண்டவாளமே இல்லாமல் ஓடும் ரயில் இருக்கிறதா?
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...
புகைவண்டி (ரயில்) தண்டவாளத்தில் ஓடுகிறது. தண்டவாளமே இல்லாமல் ஓடும் ரயில் இருக்கிறதா? உண்மையா?
தண்டவாளமே இல்லாத ரயில் இருக்கிறது என்பது உண்மைதான். சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் இந்த ரயில் பயன்பாட்டுக்கு வந்தது.
உலகிலேயே முதல் முறையாக தண்டவாளம் இல்லாத புதிய ரக ரயிலை சீனா வடிவமைத்துத் தயாரித்து இருந்தது. சீனாவின் ஹுனான் மாநிலத்தில் உள்ள சூ சோ நகரில் இந்தப் புதிய ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
சாலையில் வாகனம் போன்று ரயில் இயங்கும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 307 பேர் பயணிக்கலாம், மணிக்கு 70 கி.மீ வேகத்தில் ஓடக் கூடியது.
இது இயங்கும்போது இதற்கென்று தனியாக தண்டவாளங்கள் ஏதும் கிடையாது. சாலையில் பேருந்து போல இந்த ரயில் செல்லும்.
Regarding rare information that children should know...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.