FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
குழந்தைகள் உலகம்

சிரி... சிரி...

'பொதுக்கழிப்பிடத்துக்குள்ள போனவங்க யாரும் சீக்கிரம் வெளியே வரமாட்டேங்கிறாங்களே, ஏன்?'

Updated On : 7 ஜூன் 2026, 4:07 am IST
பகிர்:

'பொதுக்கழிப்பிடத்துக்குள்ள போனவங்க யாரும் சீக்கிரம் வெளியே வரமாட்டேங்கிறாங்களே, ஏன்?''

'உள்ள இலவச வைஃபை வசதி இருக்காம்!''

-எம்.பி.தினேஷ், கோவை.

Advertisement

Advertisement

'இன்னைக்கு ஏன்டா இன்டர்வியூக்குப் போகலை?''

'நீங்கதானே நாலு பேர் கேள்வி கேட்கிற இடத்துக்குப் போகக்கூடாதுன்னு சொன்னீங்க!''



'உன் கஷ்ட காலத்தில் உன் சொந்தக்காரங்க, உறவுக்காரங்க எல்லோரும் உங்க பின்னாடி நிப்பாங்க...''

'நீங்க சொல்வது வாஸ்தவம்தான்... என் கல்யாண ஆல்பத்தில் அப்படித்தான் இருக்கிறார்கள்!''



'எதுக்கு உன் பொண்டாட்டி உன் தலையில் சுத்தியலைப் போட்டாள்?''

'சுத்தி போட்டா திருஷ்டி கழியும்னு யாரோ சொன்னாங்களாம்!''

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

'தூக்கத்துல நடக்குற வியாதிக்கு நான் கொடுத்த மருந்தால உங்க கணவர் குழந்தை மாதிரி ஆயிட்டாரா... எப்படி?''

'இப்ப, தூக்கத்துல நடக்குறதுக்குப் பதிலா தவழ்றாரு, டாக்டர்!''



'என்ன ராப்பிச்சை... இப்பல்லாம் மதியத்துலயே வர்றே?''

'நைட் வாட்ச்மேன் வேலை கிடைச்சிருக்கு, தாயி!''



'ஏன் இன்டர்வெல் விடாம படத்தை ஓட்டுறாங்க?''

'தியேட்டர் ஓனருக்கும், பாப்கார்ன் ஸ்டால்காரருக்கும் மனக்கசப்பாம்!''

-பர்வீன் யூனுஸ், சென்னை.

'வேலையை விட்டுப்போன பழைய சரக்கு மாஸ்டர் என்ன ஆனார்?''

'புதிய சரக்கு மாஸ்டரா அவரே ரிடர்னாயிட்டார்!''



'தோழி மெயில் அனுப்பி இருக்கிறா...''

'என்னவாம்?''

'அவள் சொன்ன வம்புக்கு ஃபீட்பேக் அனுப்பச் சொல்றா...!''



'பாடாய்ப்படுத்தி என்கிட்ட கடன் வாங்குனான்...''

'இப்ப என்ன நடக்குது?''

'திருப்பி வாங்க நான் இப்போ பாடாய்ப்படுறேன்.''

- பர்வதவர்த்தினி, பம்மல்.

'ஓடிப்போன என் புருசனை நம்பி இனிமே பிரயோஜனம் இல்லை... நான் வேற ஒருத்தரை மேரேஜ் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன், சாமி?''

'உன் புருசன் இப்ப திரும்பி வந்தால் ஏத்துக்குவியான்னு சொல்லு... நான் உடனே வரவழைச்சுடறேன்!''



'உங்க மனைவிக்கு கொழுப்பு ஓவரா இருக்கு... சொல்லிடுங்க!''

'நீங்களே சொல்லிடுங்க டாக்டர்... நான் சொன்னா என்கிட்ட சண்டைக்கு வருவா!''



'படம் நல்லாத்தான் இருக்கு...ஆனா?''

'ஆனா, என்ன சார்?''

'டைட்டிலை மட்டும் 'நல்லவன்'ங்கிறதுக்குப் பதிலா 'கெட்டவன்'னு மாத்திட்டா படம் நல்லா ஓடும், சார்!''



'உங்க கணவருக்கு ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்கு... அவர் கோபப்படுற மாதிரி நீங்க நடந்துக்கக் கூடாதும்மா...!'

'நான் எதைச் செய்தாலும் அவருக்குக் கோபம்தான் வரும், டாக்டர்!''



'இந்த போலீஸ் ஸ்டேஷன்ல ஏதோ நடக்கப் போகுதுன்னு சொல்றீயே, எப்படி?''

'சி.சி.டி.வி. கேமரா ஒயரை கட் பண்ணிவிடுறாங்களே!''

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments