✕
முகப்பு

சாக்லேட்

சாக்லேட்டை நினைச்சாலே இனிக்கும் சப்புக் கொட்ட நாக்கு ரொம்பத் துடிக்கும்

20 ஜூன் 2026, 7:18 pm
பகிர்:

சாக்லேட்டை நினைச்சாலே இனிக்கும்

சப்புக் கொட்ட நாக்கு ரொம்பத் துடிக்கும்

கண்டவுடன் நான் நாலு எடுப்பேன்

Advertisement

Advertisement

கண்ணுருட்டி அம்மா மிரட்ட திகைப்பேன்!

-

பள்ளிக்கூட பையில் ஒளித்து வைப்பேன்

போகும் வழியில் நானுமதை சுவைப்பேன்

நாக்கில் சாக்லேட் ஆறு ஓடும்

நாள்முழுக்க இனிப்பு நின்று ஆடும்!

-

பிறந்தநாளு என்று நண்பன் தருவான்

பத்துதின்றும் நான்பத்தா தென்பேன்

அப்பாவோ அள்ளிஅள்ளித் தருவார்

அம்மாகண்டால் என்னை அடிக்க வருவாள்

-

அதிக இனிப்பு ஆகாது என்பாள்

அதனால் பல் சொத்தையாகும் சொல்வாள்

அதிர்ச்சியாகி நானுமதைக் கேட்பேன்

ஆனாலும் மறைத்து நானும் தின்பேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.