FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நிர்வாகம் விரும்பினால் மீண்டும் என்விடியா சிஇஓ-ஆக பொறுப்பேற்கத் தயார்: ஜென்சன் ஹுவாங்

நிர்வாகம் விரும்பினால் மீண்டும் என்விடியா சிஇஓ-ஆக பொறுப்பேற்கத் தயார் என அந்த நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங் தெரிவித்திருப்பது குறித்து...

38 வினாடிகள் முன்பு
என்விடியா நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங் - AP
பகிர்:

நிர்வாகம் விரும்பினால் மீண்டும் என்விடியா தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ-ஆக) பொறுப்பேற்கத் தயார் என அந்த நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளார்.

சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் ரகசிய உறவு இருந்ததை ஜென்சன் ஹுவாங் ஒப்புக் கொண்டார். இதைத்தொடர்ந்து, அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் சிஇஓ ஜென்சன் ஹுவாங் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

Advertisement

Advertisement

இதையடுத்து, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான கோலெட் கிரெஸ் இடைக்கால சிஇஓ-ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், இந்திய மதிப்பில் பல லட்சம் கோடி வரையிலான சந்தை மதிப்பை என்விடியா நிறுவனம் இழந்திருக்கிறது. இதனால், ஜென்சன் ஹுவாங்-ஐ மீண்டும் சிஇஓ பணியில் அமர்த்த வேண்டும் என முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து ஜென்சன் ஹுவாங் தெரிவித்திருப்பதாவது:

கடந்த ஒரு வாரமாக குடும்ப நண்பர்கள், தொழில் நண்பர்கள் மற்றும் நான் இதுவரை சந்திக்காதவர்கள் என பலரிடமிருந்து கிடைத்த அன்பும் ஆதரவும் என்னை நெகிழச் செய்துள்ளது. எனக்கும் என் குடும்பத்துக்கும் கருணை காட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி.

நான் 53 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு வந்தேன். அமெரிக்கக் குடிமகனாக ஆனது என் வாழ்வின் மிகப்பெரிய பரிசுகளில் ஒன்றும் பெருமைக்குரிய தருணங்களில் ஒன்றும் ஆகும்.

நான் நம் நாட்டையும் என்விடியாவையும் நேசிக்கிறேன். இருப்பினும், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் கடுமையான தவறுகளைச் செய்துள்ளேன். என்னால் நிர்வாகக் குழுவுக்கு ஏற்பட்ட சிக்கல்களுக்கு நான் வருந்துகிறேன். எனது தவறுகளை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். மேலும் நிர்வாகக் குழுவின் சுதந்திரமான விசாரணைக்கு ஒத்துழைக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

நான் வெளியேறியதிலிருந்து, என்விடியாவின் ஊழியர்கள், முதலீட்டாளர்கள், வணிகப் பங்குதார்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து நான் மீண்டும் சிஇஓ-ஆக வேண்டும் என பல்வேறு அழைப்புகள் வருகின்றன.

எனவே, என்னை மீண்டும் சிஇஓ-ஆக பணியமர்த்த நிர்வாகக்குழு விரும்பினால் அதற்கு நான் தயார் என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Former NVIDIA CEO Jensen Huang has stated that he is prepared to return as the company's CEO, should the management wish for it.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.