சீன உளவாளியுடன் உறவு! என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் பதவி விலகல்!
என்விடியா நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து ஜென்சன் ஹுவாங் ராஜிநாமா...
சீன உளவாளியுடன் உறவில் உறவில் இருந்ததாக ஒப்புக்கொண்ட என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சன் ஹுவாங் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
உலக அளவில் செய்யறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பக் கருவிகள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் அமெரிக்காவின் என்விடியா நிறுவனத்தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங் அந்நிய நாட்டு உளவாளியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை ஒப்புக்கொண்டார்.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜென்சன் ஹுவாங்குடன் நெருக்கமாக இருந்த ஆலிஸ் ஹுவாங் என்ற பெண், சீனாவுக்காகத் தகவல் திரட்டும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதப்பட்ட நிலையில், என்விடியா நிறுவனத்தில் பணிப்புரியும் மற்றொரு பெண்ணுடனும் ஹுவாங் உறவில் இருந்ததாகச் செயதிகள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, என்விடியா நிறுவனத்தின் பங்குகள் பெரும் அளவில் சரிந்ததால், ஜென்சன் ஹுவாங்கை சிஇஓ பதவியில் இருந்து நீக்குவதற்கு அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நிறுவனம் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்ததால், என்விடியாவின் சிஇஓ பதவியில் இருந்து ஜென்சன் ஹுவாங் இன்று (நவ. 12) ராஜிநாமா செய்துள்ளார்.
இதையடுத்து, என்விடியா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான கோலெட் கிரெஸ் என்பவர் இடைக்கால சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான என்விடியாவின் பங்குகள் சுமார் 10 சதவிகிதம் அளவுக்குச் சரிந்துள்ளன. இதனால், இந்திய மதிப்பில் ரூ. 60 லட்சம் கோடிக்கும் அதிகமாக, அந்நிறுவனத்தின் பங்குகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.