சிரி... சிரி...
டாக்டர் அதிகமா பேசாமலிருக்கிறாரே...? அவர் பில் அதிகம் பேசும்!
'டாக்டர் அதிகமா பேசாமலிருக்கிறாரே...?'
'அவர் பில் அதிகம் பேசும்!'
-மஞ்சுதேவன், பெங்களூரு.
Advertisement
Advertisement
-----------------------------------------------------------------------
'மாடு ஏன் சுரங்கப் பாதையில் போய்ப் படுக்குது?'
'அங்க தான் டிராஃபிக் தொல்லை இருக்காது!'
- பர்வதவர்த்தினி, பம்மல்.
-----------------------------------------------------------------------
'தலைவர் உட்பட ஒவ்வொருத்தரா மேடையில பேசிட்டு, கீழே வந்து உட்கார்ந்துக்குறாங்களே, ஏன்?'
'கீழே கூட்டம் குறைவா இருக்கிறதால இந்த ஏற்பாடாம்!'
-செ.ந.வடிவேல், திருப்பூர்.
-----------------------------------------------------------------------
'அவரு பெரிய சமையல்காரர்!'
'இருக்கலாம்... அதுக்காக முழுப் பூசணிக்காயைப் போட்டு சாம்பார் பண்றது நல்லாயில்லை!'
-தீபிகா சாரதி, சென்னை.
-----------------------------------------------------------------------
'நீங்க சாப்பிடுற ஸ்வீட்டை பாதியா குறைக்கணும்!'
'மைசூர் பாகை ரெண்டு துண்டா உடைச்சி சாப்பிடவா, டாக்டர்?'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
-----------------------------------------------------------------------
'நான் சொல்ற பொண்ணு, இருக்கிற இடமே தெரியாது, சார்!'
'பிறகு எங்கே போய்ப் பொண்ணைப் பார்க்கிறது?'
'யாருமே என்னை போலீஸ்னு நம்ப மாட்டேங்கிறாங்க..!'
'தொந்தியை டெவலப் பண்ணுங்க, சார்!'
-வி.ரேவதி, தஞ்சை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.