காவல்துறை ஜெயலலிதாவின் ஏவல்துறை; ஸ்டாலின்
நாகை: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நாகை , நகராட்சி தலைவர் வேட்பாளராக தி.மு.க. சார்பில் போட்டியிடும் தங்கப்பிள்ளளை மற்றும் 36 வார்டு கவுன்சிலர்களை ஆதரித்து தி.மு.க. முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலி
நாகை: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நாகை , நகராட்சி தலைவர் வேட்பாளராக தி.மு.க. சார்பில் போட்டியிடும் தங்கப்பிள்ளளை மற்றும் 36 வார்டு கவுன்சிலர்களை ஆதரித்து தி.மு.க. முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,
கடந்த தி.மு.க. ஆட்சியில் என்றுமே இல்லாத அளவிற்கு 5 ஆண்டுகளில் மகத்தான சாதனை படைத்தது. கருணாநிதிக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என மக்கள் எண்ணியதால் தான் நடந்துமுடிந்தசட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வியுற்றது. தோல்வி எங்களுக்கு புதிதல்ல.
ஜெயலலிதாவைப்போல் தேர்தலில் ஜெயித்தால் ஆட்சி, தோற்றால் கொடநாடு என ஓடி ஒளியமாட்டோம். தமிழகத்தில் தற்போது காவல்துறை ஜெயலலிதாவின் ஏவல்துறையாக உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 6 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர். பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியானார்கள்.
Advertisement
Advertisement
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு வந்தது. போலீசார் அப்பாவிகள். மேலிடம் சொல்வதைத்தான் செய்கிறார்கள். மாற்றம் கொண்டுவருவார் என நினைத்து அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துவிட்டார் ஜெயலலிதா என்று ஸ்டாலின் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.