முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரையில் அதிமுக வார்டு செயலாளர் கொலை

திருப்பரங்குன்றம் (மதுரை), ஜூன் 11: மதுரையில் அதிமுகவின் 88வது வார்டு செயலாளர் மனோகரன் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார். மனோகரனுக்கும் பூமிநாதன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளதாம். கடந்த 4

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:39 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:12 PM

திருப்பரங்குன்றம் (மதுரை), ஜூன் 11: மதுரையில் அதிமுகவின் 88வது வார்டு செயலாளர் மனோகரன் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.

மனோகரனுக்கும் பூமிநாதன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளதாம். கடந்த 4.5.2012ல் மனோகரன் வாய்த்தகராறில் பூமிநாதனையும் அவரது உறவினர்களையும் தாக்கினார் என்று புகார் பதிவு செய்யப்பட்டு வழக்கு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு அவனியாபுரம் சிந்தாமணி பகுதியில் வைத்து, பதில் தாக்குதலாக பூமிநாதன் மற்றும் அவரது உறவினர்கள் மனோகரனைத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மதுரை பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலன் தராமல் இரவு 1 மணி அளவில் அவர் உயிரிழந்தார். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.