முகப்பு
தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது

செம்மண் கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் ரத்து ஆன நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடியை போலீஸார் கைது செய்வதற்காக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அவர் செஞ்சி சாலையில்

Updated On : 6 அக்டோபர் 2012, 1:41 pm IST
பகிர்:

செம்மண் கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் ரத்து ஆன நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடியை போலீஸார் கைது செய்வதற்காக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அவர்  தலைமறைவானார். செஞ்சியில் உள்ள திமுக பிரமுகர் வீட்டில் பதுங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அவர் இன்று காலை செஞ்சியில் துண்டுப் பிரசுரம் கொடுக்கும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அதன் பின்னர் 10.45க்கு விழுப்புரம் வந்தார். அவரை போலீஸார் சூழ்ந்து கொண்டனர். இருப்பினும் கூட்டத்துடன் திமுக அலுவலகம் வந்தபோது, போலீஸார் அவரைக் கைது செய்ய உள்ளதாகக் கூறினர். ஆனால், அவர் தனது வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும், வீட்டுக்கு வந்து கைது செய்து கொள்ளுமாறும் கூறினார். அதை அடுத்து, அவர் வீட்டுக்கு சென்றார். அங்கே செய்தியாளர்கள் அவரைச் சந்திக்க முற்பட்டனர். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக அரசு பொய் வழக்கு போடுகிறது என்று கூறினார்.

அதன்பின்னர் 12 மணி அளவில் வீட்டுக்கு உள்ளே போலீஸார் சென்று, அவரைக் கைது செய்ய முயன்றனர். பின்னர் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் 12.40க்கு போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

Advertisement

Advertisement

பொன்முடி மீது கடந்த மாதம் 24ம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவருடைய மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments