ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தை காய்ந்த பயிர்களுடன் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தை காய்ந்த பயிர்களுடன் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மருதூர் கீழக்கால் பகுதியில் விவசாயத்துக்காக அரசு 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், 90 நாட்களில் நீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதனால் பயிர்கள் கருகின. விவசாயத்துக்குத் தேவையான நீர் இல்லாமையால், பாதிக்கப்பட்ட விவசாயிகள், கூடுதலாக நீர் திறக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால், அது தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், மருதூர் கீழக்கால் விவசாயிகள் காய்ந்த பயிர்களுடன் வந்து, வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
துணை வட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அவர்களை அழைத்தார். ஆனால், மாவட்ட ஆட்சியருடன் வட்டாட்சியர் வரும் வரை தாங்கள் காத்திருக்கப் போவதாகக் கூறிய விவசாயிகள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.