முகப்பு
தற்போதைய செய்திகள்

அரூரில் புள்ளிமான் மீட்பு

மொரப்பூர் வனச்சரகம், எட்டிப்பட்டி மற்றும் கொளகம்பட்டி காப்புக்காடுகளில் ஏரளமான புள்ளி மான்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மான்கள் குடிநீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வருவது வழக்கம்.இந்த

Updated On : 6 செப்டம்பர் 2013, 3:46 pm IST
பகிர்:

மொரப்பூர் வனச்சரகம், எட்டிப்பட்டி மற்றும் கொளகம்பட்டி காப்புக்காடுகளில் ஏரளமான புள்ளி மான்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மான்கள் குடிநீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வருவது வழக்கம்.இந்த நிலையில், எட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வனப்பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் வெளியே வந்த புள்ளிமானை நாய்கள் கடித்துள்ளது. இதில் காயமடைந்த மான் சாலையோரம் இருந்ததாம். காயமடைந்த பெண் புள்ளி மானின் வயது 3 ஆக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மொரப்பூர் வனச்சரகர் என்.ஆறுமுகம், வனவர் சி.வேடியப்பன் தலைமையிலான வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு, அரசு கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதியில் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.