மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதல்: தொழிலாளி சாவு
அரூர் வட்டம், பையர்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கிருஷ்ணன் (35). இவர் தமது மோட்டார் சைக்கிளில் தீர்த்தமலை-நரிப்பள்ளி சாலையில், நரிப்பள்ளியில் இருந்து பையர்நாய்கன்பட்டி
அரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதியதில் தொழிலாளி கிருஷ்ணன் (35) உயிரிழந்தார்.
அரூர் வட்டம், பையர்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கிருஷ்ணன் (35). இவர் தமது மோட்டார் சைக்கிளில் தீர்த்தமலை-நரிப்பள்ளி சாலையில், நரிப்பள்ளியில் இருந்து பையர்நாய்கன்பட்டி கிராமம் நோக்கிச் சென்றுள்ளார்.அப்போது மோட்டூர் பாலம் அருகே எதிரே நரிப்பள்ளி நோக்கி வந்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச் சம்பவம் குறித்து பையர்நாய்க்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கவுண்டர் மகன் கமலேசன் (36) அளித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.