அரசு அனுமதியின்றி விநாயகர் சிலை வைப்பு: 4 பேர் மீது வழக்குப் பதிவு
அரூர் வட்டம், செங்குட்டை கிராமத்தில் அரசு அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்து சிலர் பூஜைகள் செய்துள்ளனர். இச் சம்பவம் குறித்து கே.ஈச்சம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ஆர்.சிவக்குமார் அளித்த
அரூர் அருகே அரசு அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக 4 பேர் மீது போலீஸார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அரூர் வட்டம், செங்குட்டை கிராமத்தில் அரசு அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்து சிலர் பூஜைகள் செய்துள்ளனர். இச் சம்பவம் குறித்து கே.ஈச்சம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ஆர்.சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், செங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், லோகநாதன், சீனிவாசன், மாரியப்பன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இச் சம்பவம் குறித்து கம்பைநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.