வெடிப்பொருள்கள் கடத்தல்: இளைஞர் கைது
அரூர் ஒன்றியம் அச்சல்வாடி, ஒடல்பட்டி பகுதியில் ஒரு கும்பல் தடை செய்யப்பட்ட வெடிப்பொருள்களை கேரளாவுக்கு தொடர்ந்து கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையெடுத்து
அரூர் அருகே வெடிப்பொருள்கள் கடத்தியதாக இளைஞர் வெங்கடாசலம் (27) என்பவரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
அரூர் ஒன்றியம் அச்சல்வாடி, ஒடல்பட்டி பகுதியில் ஒரு கும்பல் தடை செய்யப்பட்ட வெடிப்பொருள்களை கேரளாவுக்கு தொடர்ந்து கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையெடுத்து அரூர் காவல் ஆய்வாளர் சென்னகேசவன் தலைமையிலான போலீஸார், அரூர்-அச்சல்வாடி சாலையில் வாகண தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒடசல்பட்டி பேருந்து நிறுத்தம் எதிரே சந்தேகமான முறையில் இருந்த இளைஞர் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் அச்சல்வாடி ஊராட்சி ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டு மகன் வெங்கடாசலம் (27) என்பது தெரியவந்தது. இவர் தடை செய்யப்பட்ட வெடிப்பொருள்களை கேரளாவுக்கு கடத்தும் கும்பலுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.அவரிடமிருந்து, 5 கிலோ அம்மோனியம் நெட்ரேட் உப்பு, 5 ஜலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.இச் சம்பவம் குறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.