FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஆசிரியர் சாவு

அரூர் வட்டம், எல்லப்புடையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி மகன் பழனி (40). இவர் வேப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.இவர், இம் மாதம் 12-ம் தேதி இரவு 7

Updated On : 22 செப்டம்பர் 2013, 6:02 pm IST
பகிர்:

அரூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஆசிரியர் கோ.பழனி (40) )சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

அரூர் வட்டம், எல்லப்புடையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி மகன் பழனி (40). இவர் வேப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.இவர், இம் மாதம் 12-ம் தேதி இரவு 7 மணியளவில், அரூர்-எல்லப்புடையாம்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் தமது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது  எல்லப்புடையாம்பட்டி வராட்டாறு மேடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர் பழனியிடம்  அந்த வழியில் நடந்து சென்ற ஒருவர் வண்டியை நிறுத்துமாறு கையை காட்டினாராம்.இதனால் ஆசிரியர் திடீரென பீரேக் போட்டதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்தாராம். இதில் அவருக்கு தலை மற்றும் மூக்குதண்டுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஆசிரியர் கோ. பழனிக்கு மனைவி வனிதா, 2 மகள்கள், மகன் உள்ளனர்.இச் சம்பவம் குறித்து அவரது தம்பி பெருமாள் (38) அளித்த புகாரின் பேரில் அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments