FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

கொத்தடிமை மீட்பு சம்பவம்: கோழிப்பண்ணை உரிமையாளர் மீது 14 பிரிவுகளில் வழக்குப் பதிவு

திருச்செங்கோட்டில் கொத்தடிமைகள் மீட்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கோழிப்பண்ணை உரிமையாளர் மீது 14 பிரிவுகளின் கீழ் போலீஸார்

Updated On : 28 செப்டம்பர் 2013, 3:55 pm IST
பகிர்:

திருச்செங்கோட்டில் கொத்தடிமைகள் மீட்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கோழிப்பண்ணை உரிமையாளர் மீது 14 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அரூர் வட்டம், செங்குட்டை கலைஞர் நகரைச் சேர்ந்த ஜெகதீசன் மகன் சிவா (37). இவரது மனைவி சித்ரா (30). இந்த தம்பதியரின் மகள் தேன்மொழி (15), மகன்கள் சந்தோஷ்குமார் (12), தமிழரசு (11), இவர்களது உறவினர் சுந்தரி (40), ஊமைதுரை மகன் குரு (25) ஆகிய 7 பேரும் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், சாணாங்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கோழிப் பண்ணையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கூலி வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது.

வேலையில் சேரும் போது கோழிப்பண்ணையில் வீட்டு மனைப் பட்டாவை அடகு வைத்து ரூ.28 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. கோழிப்பண்ணையில் இந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் அரிசியும், மாதம் ஊதியம் ரூ.500 வீதம் வழங்கப்பட்டதாம். வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்து தொழிலாளர்கள் தமது சொந்த ஊருக்கு செல்ல கோழிப்பண்ணை நிர்வாகம் அனுமதிக்கவில்லையாம். கோழிப்பண்ணையில் இருந்து 13.09.2013-ல் தொழிலாளர்கள் தப்பி வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சிவாவின் மனைவி சித்ராவை சாட்டை மற்றும் கம்பியால் அடித்து கொடுமை செய்ததாகவும், அவர் எந்திரத்தில் சிக்கி தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டபோது, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தலைப் பகுதியில் தவறான மருத்துவ அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

கோழிப்பண்ணையில் அடகு வைக்கப்பட்டுள்ள வீட்டு மனைப் பட்டா, 5 ஆண்டுகள் வேலை செய்தற்கான ஊதியம், மருத்துவ சிகிச்சைக்கான உதவி செய்ய வேண்டும் என தொழிலாளி சிவா மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 20.09.2013-ல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க், அரூர் எம்எல்ஏ பி.டில்லிபாபு ஆகியோரிடம் நேரில் புகார் மனு அளித்தனர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி-யின் உத்தரவின்படி, இச் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் திருச்செங்கோடு வட்டம், சாணாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனியார் கோழிப்பண்ணை உரிமையாளர் துரைசாமி மகன் ராஜா (37) மற்றும் அவரது உறவினர்கள் சிலர் மீது கொத்தடிமை ஒழிப்புச் சட்டம், தொழிலாளர்களை அடித்து துன்புறுத்துதல், கொடுமை செய்தல், கொலை மிரட்டல், பெண்களை அடித்தல் மற்றும் இழிவாக பேசுதல் உள்பட ஜாமீனில் வெளி வர முடியாத 14 பிரிவுகளின் கீழ்  கம்பைநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்துக்கு மாற்றம்:

கொத்தடிமை மீட்பு சம்பவம் குறித்து கம்பைநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையெடுத்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக இந்த வழக்கு நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments