டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்ற 30 பெண்கள் கைது
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் உள்ள 6 மதுபானக்கடைகளும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. மற்றும் மக்கள் அதிகம் வந்து போகும் கடைவீதி மற்றும் கோவில்களுக்கு அருகில் உள்ளன.
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை பூட்ட முயற்ச்சித்த அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 30 பேரை ஜயங்கொண்டம் போலீசார் செவ்வாய்கிழமை கைதுசெய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் உள்ள 6 மதுபானக்கடைகளும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. மற்றும் மக்கள் அதிகம் வந்து போகும் கடைவீதி மற்றும் கோவில்களுக்கு அருகில் உள்ளன. இவற்றை நீதிமன்ற உத்தரவு படி அகற்ற வேண்டும், தமிழகத்தில் மதுக்கடைகளால் பெண்கள் இளவயதில் விதவையாகின்றனர் எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பனவைகள் உள்ளிட்ட கோரிகத்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணை செயலர் எஸ்.கீதா தலைமையில் மாவட்ட தலைவர் எஸ்.மீனா, மாவட்ட செயலர் கலையரசி, ஒன்றிய செயலர்கள் ஆண்டிமடம் ஏ.அநுசுயா, ஜயங்கொண்டம் பி.பதமாவதி, தா.பழூர் கே.ராணி மற்றும் ஏ.பல்கீஸ், ஏ.ராஜா, பி.அமுதா, எஸ்.மேரி, உள்ளிட்டவர்கள் ஜயங்கொண்டம் கயைவீதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஜயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வின்சென்ட்ஜெயராஜ், ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர்கள் ரபீக்ஹுசேன், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட போலீசார் 30 பெண்களை கைதுசெய்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.